•  Retrait gratuit dans votre magasin Club
  •  7.000.000 titres dans notre catalogue
  •  Payer en toute sécurité
  •  Toujours un magasin près de chez vous     
  •  Retrait gratuit dans votre magasin Club
  •  7.000.000 titres dans notre catalogue
  •  Payer en toute sécurité
  •  Toujours un magasin près de chez vous
0,99 €
Disponible immédiatement
Passer une commande en un clic
Payer en toute sécurité

Description

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

ஏகமன்று என்போரும்
    நாத்திகம் சொல்வோரும்
சோகமொன்றே வாழ்விங்கு
    என்போரும் மெய்யறிய
தாகமின்றி வாழ்வோரும்
    வேறுலகு ஏதிங்கு
போகமே காண்போம்நாம்
    என்போரும் வாழ்ந்துபின்
சாகவே போகிறார்
    என்றவர்மேல் பாயும்சந்
தேகமில்லா அன்பே
     சிவம். 
 Rali

 

பிந்துவில மர்ந்தவள் கந்தனையு வந்தவள்
அந்தமில் ஆனந்தம் ஆனவள்
BKR

 

நதியாம் நறும்புனல்
வைகைக் கரையில்
மதியால் மாண்பால்
மாநிலம் ஆள்கையில்
பதியாய் சொக்கன்நின்
கரமது பற்றிட
Suresh S

 

உறவா யிருந்திட
நின்விழி தண்ணொளி
பிறவா ழியைநான்
பெரிதாய் நினையேன்
Suresh S

 

அடியார்க் கடியன் முடிவில் வடிவன்
கொடியாள் இடமாய் உடையன்
BKR

 

சந்தனமேனி யதனில்
சந்திரவதன மென்றால்
செந்தா மரையும்ஊடி
நொந்துதான் போனதந்தோ
சுந்தரத் தோளிரண்டில்
சொந்தங்கொண் டாடுகூந்தல்
செந்தாழை மடலைச்சூட
சந்திரன் நாணமுற்றான்
Suresh S

 

பாவியெதைப் பாடுவனோ
கூறிடுவாய் யானறியேன்
Suresh S

 

பூரணி பார்கவி
சங்கரி சங்கரன்
தோளணி வாரணி
வாரண வாகனன்
இந்திரன் வணங்கிடு
நாரணி நான்முகி 
Suresh S

 

ஓடுவாய் பேய்வாழ்
    சுடுகாடு அச்சுடு
காடும் வருவேன்
    உயிர்விட்டு நீயெங்கு
ஓடுவாய் பார்க்கிறேன்
    நான்.
Rali

 

மன்றாடித் தில்லை மறைபொருளைக்* 
                                      காட்டிநமை
நன்றாக்கும் நாதன் சிவன்
BKR


...    இறுதியில் மூவுலகும்
கொன்றாடும் கூத்தன்
    இளமையில் மூவுலகும்
தின்றவன் தங்கை
    மணம்கொள்ள சுந்தரனாய்
நின்றவன்..
Rali

 

விடையனும் இடையனும் வேறில ரென்னும்
தடயமொன் றுண்டிங்கு கேளீர் - இடையன்
பசுக்களைக் காத்திடும் கோபாலன் என்றால்
பசுபதி தானே அவன்.
BKR

 

..மாடைநீ மேய்த்தது
    போதும் உனக்கென
கூடை நிறையவைத்தேன்
    வெண்ணெய் முறுக்குடன்
சீடை மகிழ்ந்துண்ண
    வா.
Rali

 

தாவியே வெண்ணையை
தானங்கு திருடியே 
நாவினில் தேய்த்தவன் 
நல்ருசி கண்டவன்
பாவையாம் திரௌபதி
பாத்திரம் தந்திட பசித்
தேவையால் தேடியே
தின்றவன் கீரையை
மாவடை முடித்தவன்
SKC

 

இந்தியா விலங்குநீங்கி 
      ஆண்டெழுப தானது
வந்தநாள்முதல் எங்கு 
     தேடியும் இல்லை
          சுதந்திரம் 
இந்தநாள் வரைநமக்கு..
Pithan

 

காணாமல் போனான் அருவமா யென் ஈசனே, 
தூணாய்ப் பிழம்பாய்ச் சோதியாய் மாலயனுக் கன்றே, 
தேனாய் என்றும் திகட்டா தினிப்பாய், ..
Ravindran K

 

நானிருக்கும் நாள்வரைக்கும்
என்கவியில் நீயிருக்கத்
தானெனக்கு வரமருள்வாய்
தவக்கோலக் காமாட்சி
Suresh S

Spécifications

Parties prenantes

Auteur(s) :
Editeur:

Contenu

Langue:
Anglais

Caractéristiques

EAN:
9781393232155
Date de parution :
08-07-20
Format:
Ebook
Protection digitale:
/
Format numérique:
ePub

Les avis