உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" பிரியும் உயிர் உடல்பேணப் பேதலித்து பரிதவித்து
கரிமுகனின் சோதரனைக் காணுவ தெக்காலம்? "
" குற்றஉணர் வின்றி குருபாதம் போற்றிடுவோம்
கற்றபயன் அன்றோ அது "
" கற்றதனால் ஆயபயன் காம குரோதமேயன்றி
பெற்றதுவும் வேறில்லை "
" புல்லாய்ப் புழுவாய்ப் பூண்டாய்ப் பிறந்திளைத்து
நல்லாரின் ஆசியில் பெற்ற இவ்வரும் மனிதப் பிறவி "
" இனிப்பிறவி இல்லை எனும் இன்ப நிலை தானுறவே
பனித் தலையன் தாளினையே பற்றுவது எக்காலம்? "
" கொல்லும் இக்கால வழக்கில் இறுக இணைந்திடாமல்
கல்லும் உயிரெழச் செய்தானைக் கருதுவ தெக்காலம்? "
" பட்ட துயர் போதுமென்று பாசவலை தனை நீக்கி
நட்ட கல்லும் சிவமென்றே நானறிதல் எக்காலம? "